மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்? கருத்து மோதல்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தாக்கு தல் நடத்தப்பட்டது தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி ‘ஃபோட் டோ ‌ஷூட்’டில் ஈடுபட்டிருந்தார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில் அதற்கு பாஜக பதிலடி கொடுத்து வரு கிறது.
இம்மாதம் 14ஆம் தேதி காஷ் மீரின் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் சம்பவம் நடந்தது தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை ‘ஃபோட்டோ ‌ஷூட்’டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தச் செய்தியில், “நல்ல முயற்சி. ஆனால் ஒரே ஒரு குறைதான். புல்வாமா தாக்குதல் நடந்தது தொடர்பாக மோடிக்கு தகவல் கிடைத்தும்கூட பிற்பகல் 2.30 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புகைப் படம் எடுத்துக்கொண்டிருந்தார். 
“அதன் பின்னர் கலந்து கொண்ட பேரணியில்கூட புல் வாமா தாக்குதல் குறித்து அவர் பேசவில்லை,” என ராகுல் தெரிவித்திருந்தார். 
இதற்கு பாஜக கடும் கண் டனம் தெரிவித்துள்ளது. அந்தப் புகைப்படம் காலையிலேயே எடுக் கப்பட்டது என பாஜக விளக்க மளித்துள்ளது. மேலும் ராகுலுக்கு பாஜக  பதிலடியும் கொடுத்துள்ளது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்