திருமலைக்கு நடந்தே சென்ற ராகுல் காந்தி

திருப்பதி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்றுக் காலை விமானம் மூலம் ரேணிகுண்டா சென்றார். அங்கிருந்து திருப்பதி  சென்ற ராகுல் காந்தி,  ஏழுமலை யானைத் தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து சென்றார். 
சுமார் 4 மணி நேரம் நடந்து சென்ற ராகுல் காந்தியுடன் ஆந் திர மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் சென்றனர். பாதுகாப்பு வளை யத்தை மீறி சில இடங்களில் பக் தர்களோடு ராகுல் கைகுலுக்கி வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். பிரியங்கா காந்தியின் மகன் ரைஹன் வதேராவும் ராகுலுடன் நடந்து சென்றார். 

பாதுகாப்புக் கருதி அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. தரிசனம் முடிந்த பின் னர் தாரக ராமா திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி பிர சாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவ காரம் உள்ளிட் பல்வேறு பிரச் சினைகள் குறித்து அவர் இந்தக் கூட்டத்தில் பேசத் திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நடந்தே திருமலை சென்றிருப்பது இதுவே முதல் முறை. பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி இருமுறை திருப் பதி சென்றார். விமானப் பயண மாக அது இருந்தது.