காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிப்பு

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட நூறு கம்பெனிப் படைகளை அந்நாட்டு  ராணுவம் அனுப்பியுள்ள தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
அண்மையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை பயங்கரவாதி ஒருவன் மோதச் செய்ததில் 40 வீரர்கள் பலியாகினர். 
பாகிஸ்தானின் உளவு அமைப் பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரிலேயே ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கம் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றிய தாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இதனால் இரு நாடு களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்தியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் காஷ்மீர் மாநிலத்தவர் தாக்கப்படுவதும் அவர்களை வெளியேற்றும் சம்ப வங்களும் இடம்பெற்று வருகின் றன. இதையடுத்து, அவர்களுக் குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத் தில், தாங்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல என்று காஷ்மீர் மாநிலத்தவரும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு உரிமையை வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் 35ஏ தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசா ரணைக்கு வருகிறது. இதை அடுத்து, அங்கு பெரும் போராட் டத்தை நடத்த பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்குத் தகவல் கிட்டி யது. அந்தப் போராட்டத்தில் வன் முறை வெடித்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் மத்திய அரசு அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. 
ராணுவத்தினர் சாலைவழி யாகச் சென்றபோது பயங்கர வாதிகள் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டதால் இம்முறை  100 கம்பெனி படையினரும் வான்வழி யாக ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக, ஜம்மு-காஷ்மீர் விடு தலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் தலை வர் அப்துல் ஹமீத் ஃபயாஸ் உட்பட பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் 12 பேரை போலிஸ் கைது செய்தது.
முன்னதாக, ஜெய்ஷ்-இ-முகம் மது பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகமாகக் கருதப்பட்ட மதரசா ஒன்றையும் அதனருகில் இருக்கும் ஒரு பள்ளிவாசலையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பே என்று இந்தியா விமர்சித்துள்ளது.

விமானக் கடத்தல் மிரட்டல்

இதற்கிடையே, இந்திய விமானம் ஒன்றைப் பாகிஸ்தானுக்குக் கடத்தவிருப்பதாக வந்த மர்ம தொலைபேசி அழைப்பை அடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டு, சோதனை நடை முறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.