விமானக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பார்வையாளர்களுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட கார்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகின. வறண்ட வானிலையும் காற்று வேகமாக வீசியதுமே தீ பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது. அணைக்கப் படாமல் வீசப்பட்ட சிகரெட் துண்டால் இந்தத் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் சிறிது நேரம் விமானக் கண்காட்சி தடைபட்டது. இச்சம்பவத்தில் பொதுமக்களில் எவரும் பாதிக்கப்படவில்லை. கடந்த புதன்கிழமை தொடங்கிய விமானக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. படம்: இந்திய ஊடகம்