பிரதமர் மோடி: அடுத்த ‘மனதின் குரல்’- தேர்தலுக்குப் பிறகு மே கடைசி வாரத்தில் ஒலிக்கும்

இந்தியாவில் தான் ஆற்றி வரும் ‘மனதின் குரல்’ என்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சி நாடாளுமன் றத் தேர்தலுக்குப் பிறகு வரும் மே மாதம் கடைசியில் தொடரும் என்று நேற்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார்.
நடக்க இருக்கும் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று தான் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பது நிச்சயம் என்பதை இதன் மூலம் அவர் தெரியப்படுத்தினார். 
நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து தொடர்ந்து மாதாமாதம் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். 
அதனையொட்டி நேற்று 53வது தடவையாக தான் ஆற்றிய உரை யில், நலமான ஜனநாயக மரபைக் கட்டிக்காக்கும் வகையில் வரும் மே மாதம் கடைசி ஞாயிறு அன்று அடுத்த ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி யில் தன் குரல் ஒலிக்கும் என்று திரு மோடி நேற்று தெரிவித்தார். 
“அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் பரபரப்பில் நாம் மூழ்கிவிடு வோம். வரும் தேர்தலில் நான் ஒரு வேட்பாளர்,” என்று அவர் குறிப்பிட்டார். தேர்தல் நடக்கும் போது மனதின் குரல் ஒலிபரப்பு இடம்பெறக்கூடாது என்று எதிர்த் தரப்புகள் இதுநாள்வரை குரல் கொடுத்து வருகின்றன.
மோடியின் இந்த அறிவிப்புகளை வைத்து பார்க்கையில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் மே மாதத் திற்கு முன்னதாக நடந்துவிடும் என்று தெரிகிறது. 
அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் தானே பிரதமராகிவிட முடியும் என்று திரு மோடி உறுதி பட நம்புகிறார் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது. 
இந்திய தேர்தல் ஆணையம் இனிமேல்தான் தேர்தல் அறிவிப்பு களை வெளியிடவேண்டும். தேர்தல் கட்டம் கட்டமாக நடக்கும் என்று தெரிகிறது.
மனதின் குரல் உரையில் போர் வீரர்களுக்கான தேசிய நினைவுச் சின்னம் பற்றி பிரதமர் பேசினார்.  
இதற்கு முன்னதாக 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் அந்த ஆண்டு மே 16ஆம் தேதி வெளியிடப்பட்டன. பெரும் வெற்றி பெற்ற மோடி, 2014 மே 26ஆம் தேதி பிரதமராக பொறுப்பெடுத்துக் கொண்டார். இந்த ஆண்டு மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அந்த மாதத் தின் 26ஆம் தேதியாக உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்