காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் போலிஸ் அதிகாரி, மூன்று பயங்கரவாதிகள் பலி

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் பதுங்கியிருந்த சில பயங்கரவாதி களுக்கும் இந்தியப் போலிசுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் போலிஸ் டிஎஸ்பி அமான் தாக்கூர் மரணமடைந்தார்.
போலிசார் நடத்திய தாக்கு தலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர் கள் அனைவரும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப் பைச் சேர்ந்தவர்கள். மாண்ட பயங்கரவாதிகளில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாலித் மற்றும் நுமான் என்னும் அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் இருந்து எல்லைக்கோட்டின் வழி யாக இந்தியாவுக்குள் நுழைந்து காஷ்மீரின் தெற்குப் பகுதியில்  ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததாக போலிஸ் உளவுப்படை வட்டாரங் கள் நேற்று தெரிவித்தன.
தாக்குதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் படு காயமுற்றதாக அறியப்படுகிறது. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பயங்கரவாதி களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த போலிஸ் டிஎஸ்பி அமான் தாக்கூர் மறைவுக்குக் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குப் போலிஸ் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்