விடுதியின் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவத் தலைவர்

விடுதியின் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவத் தலைவர்

1 mins read

வாரணாசி: வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியின் மாணவத் தலைவர் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டாம் ஆண்டு மாணவ ரான 22 வயது விவேக் சிங், மாணவர் விடுதியின் வாசலில் இருந்போது அவரை .32 ரக துப்பாக்கியைக் கொண்டு தாக்கு தல் நடத்தியோர் மொத்தம் எட்டு முறை சுட்டுதாக போலிஸ் உயர் அதிகாரி ஆனந்த் குல்கர்னி கூறினார். அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு விவேக் சிங் உடனடியாகக் கொண்டு செல்லப் பட்டார். ஆனால் அவர் மாண்டு விட்டதாக அங்கு தெரிவிக் கப்பட்டது. கொலைகாரர்களைக் கண்டு பிடிக்க போலிசார் ஏழு சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனர். விவேக் சிங்கின் மரணத்தால் கோபம் அடைந்த கல்லூரி மாணவர்களை அமைதிப்படுத்த மாவட்ட நீதிபதி சம்பவ இடத்துக்கு விரைந்தார்.