அருணாச்சலப் பிரதேச வன்முறை: கோரிக்கையை ஏற்ற முதல்வர்

அருணாச்சலப் பிரதேச வன்முறை: கோரிக்கையை ஏற்ற முதல்வர்

2 mins read

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டு களாக வசித்து வரும் ஆறு பிரிவினருக்கு நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ் (பிஆர்சி) வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும் வன்முறையும் பரவி வருகின்றன. கடந்த சில நாட்களில் ஏறத்தாழ 60 வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன. 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப் படுத்தப்பட்டன. பரிந்துரை செய்யப்பட்ட திட்டத்தை ஒத்திவைத்திருப் பதாக அருணாச்சலப் பிரதேச அரசு உறுதி அளித்தபோதும் போராட்டம் நீடித்தது. நேற்று முன்தினம் நித்தி விகாரில் உள்ள துணை முதலமைச்சர் சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.

மேலும் போலிஸ் துணை ஆணையர் ஒருவரின் அலுவ லகம் சூறையாடப்பட்டது. முதல் வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி யாகச் சென்றனர். அவர்களை போலிசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலிசார் விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, நேற்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் பீமா காண்டு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் சர்ச்சைக்குரிய நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ் விவகாரம் முடிந்துவிட்டதாகவும் கூறினார். போராட்டக்காரர்கள் போராட் டத்தைக் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிரந்தரக் குடியுரிமைச் சான்றிதழ் விவகாரத்தை அரசு எடுக்காது எனத் தலைமைச் செயலாளர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார். காங்கிரசின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடந்திருக்க லாம் எனப் பாஜக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.