இந்திய ராணுவ விமானம் ஒன்று தனது எல்லைக்குள் சென்றதாக பாகிஸ்தானிய ராணுவம் இன்று காலை தெரிவித்தது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதிக்குள் சென்றிருந்த அந்த விமானம், அங்கு சரக்குப் பொருட்களை வெளியிட்டதாக ராணுவம் கூறியது.
இந்தச் சம்பவத்தில் பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று பாகிஸ்தானின் ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அஷிஃப் கஃபூர் தெரிவித்தார். பாகிஸ்தானின் கட்டுப்பாடுக்குள் இருக்கும் காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவ விமானம் நுழைந்ததாகவும் அதனை பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இடைமறித்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பின்வாங்கியதாகவும் கஃபூர் கூறினார்.
ஆயினும், இந்திய விமானம் பயங்கரவாத முகாம்களின் மீது வெடிகுண்டுகளை இறக்கியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இது குறித்து இந்திய அரசாங்கம் எதுவும் கூறியதாகத் தகவல் வெளிவரவில்லை.

