துப்புரவு தொழிலாளர்களுக்கு மோடி மரியாதை

அண்மையில் நிகழ்ந்த கும்பமேளாவில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து துப்புரவு தொழிலாளர்களுக்குப் பாத பூஜை செய்து கௌரவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இவ்வாண்டு கும்பமேளா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் புனித நீராடும் பகுதியில் சுகாதாரத்தைக் கட்டிக்காக்கப் பாடுபட்ட துப்புரவு பணியாளர்களைத் திரு மோடி பாராரட்டினார்.

திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களைவிட துப்புரவு பணியாளர்கள் முன்கூட்டியே எழ வேண்டியிருந்ததாகவும் அனைவருக்கும் பிறகே தூங்க வேண்டியிருந்ததாகவும் திரு மோடி குறிப்பிட்டார். எந்தவித பாராட்டையும் எதிர்பார்க்காமல் இந்தத் துப்புரவு பணியாளர்கள் தங்களது தொழிலைத் தெய்வமாகக் கருதுவதாக அவர் கூறினார். “இவர்கள் என்றென்றும் என் நினைவில் இருப்பார்கள்,” என்று அவர் உருக்கத்துடன் கூறினார்.