பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல்

பாகிஸ்தானில் தளம் கொண்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆகாயத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

பாலகோட் என்ற நகரைக் குறிவைத்து இந்திய போர்விமானங்கள் ஆகாயத் தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விஜய் கோக்கலே தெரிவித்துள்ளார். 

இந்தத் தாக்குதலால் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக திரு கோக்கலே கூறினார். இதற்குப் பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் இரண்டு போர்விமானங்களை அனுப்பியதாக அந்நாடு கூறியிருந்தது. 

இந்தத் தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகம்மது குழுவினரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக திரு கோக்கலே செய்தியாளர் கூட்டத்தில் இன்று தெரிவித்தார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நிகழ்ந்த தற்கொலைத்  தாக்குதலுக்கு இது பதிலடியாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்