பீகாரில் தனித்து போட்டியிட மாயாவதி முடிவு

பீகாரில் தனித்து போட்டியிட மாயாவதி முடிவு

1 mins read
5ba595b8-de57-4b68-88b4-5d970fbfcbad
-

இந்தியப் பொதுத்தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பீகார் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியில் பகுஜன் சமாஜ் இணைந்ததைத் தொடர்ந்து திருவாட்டி மாயாவதி இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மட்டுமின்றி, மத்தியப் பிரதேசத்திலும் உத்தரகாண்டிலும் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கைகோக்கின்றன.

பெருங்கூட்டணி ஒன்றை அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்த காங்கிரசுக்கு இந்த இரண்டு நிகழ்வுகளும் பின்னடைவாக உள்ளன.