இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர்விமானங்கள்

இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தானின் போர்விமானங்கள் அத்துமீறி நுழைந்து பின்னர் இந்திய போர்விமானம் ஒன்றால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்திய வான்வெளியிலிருந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தானின் போர்விமானங்கள், வழியில் வெடிகுண்டுகளை இறக்கியதாக அவர்கள் கூறினர்.

உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது பற்றிய உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.

“நவ்ஷெரா, பூனாச் வட்டாரங்களின் வான்வெளிக்குள் பாகிஸ்தானின் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன,” என்று அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே, இந்தியாவின் போர்விமானங்கள் இரண்டை வீழ்த்தியதாகவும் அதன் விமானிகளைப் பிடித்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.