தமிழர், சிறுபான்மையினரை குறிவைத்து பிரகாஷ் ராஜ் பிரசாரம்

தமிழர், சிறுபான்மையினரை குறிவைத்து பிரகாஷ் ராஜ் பிரசாரம்

2 mins read

பெங்களூரு: மத்திய தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் (படம்) அங்கு வெற்றி பெறுவதற்காக பெரும்பான் மையாக வசிக்கும் தமிழர், சிறுபான்மையினரை குறிவைத்துப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ், பெங் களூரு மத்திய தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் சென்று வாக்காளர்களைச் சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸிடம் ஆதரவு கேட்ட போது, தங்களது கட்சியில் இணைந்தால் ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டனர். இந்நிலையில் பெங்களூரு மத் திய தொகுதியில் தொடர்ந்து 2 முறை வென்ற பாஜக வேட்பாளர் பி.சி.மோகனை வீழ்த்த பிரகாஷ் ராஜ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். தனியார் நிறுவனத்தின் மூலம் இந்தத் தொகுதியில் கருத்துக் கணிப்பு ஒன்றையும் நடத்தி, அதன்படி பிரசாரத்தைத் திட்ட மிட்டுள்ளார்.

அவர் போட்டியிடும் தொகுதி யில் சுமார் 18 லட்சம் வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கு மேலானவர்கள் இளைஞர் கள். மொழிவாரியாகப் பார்க்கும் போது அதிகபட்சமாக 7.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர் களை அடுத்து, இஸ்லாமியர் மற் றும் கிறிஸ்தவர்கள் 5.5 லட்சம் பேரும், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழியினர் 3 லட்சம் பேரும் வசிக்கின்றனர். இந்த வாக்காளர்களைக் குறி வைத்து பிரகாஷ் ராஜ் பிரசாரத்தை வடிவமைத்துள்ளார். செல்லும் இடங்களில் கூடி யிருக்கும் மக்களைப் பொறுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகளில் பேசி அவர்களைக் கவர்கிறார். வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் தமிழர்கள் இருப்பதால் இங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளைச் சந் தித்துப் பேச உள்ளார்.