ஹெலிகாப்டர் விபத்தில் நேப்பாள அமைச்சர் பலி

காட்மாண்டு: நேப்பாளத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் மாண்டனர். அவர் களுள் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சரும் ஒருவர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. காட்மாண்டில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ராம் கிருஷ்ணா சுபேடி கூறினார். நேற்று நடந்த இந்த விபத்தில் மாண்டவர்க ளில் சுற்றுலாத்துறை அமைச் சர் ரபிந்திரா அதிகாரியும் ஒருவர் என்பதை அவர் உறுதி செய்தார்.  மோசமான பருவ நிலையே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகி றது. கடந்த ஆண்டு இங்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 51 பேர் 
கொல்லப்பட்டனர்.