விக்கிலீக்ஸ்: பயங்கரவாதிகளின் முகாமை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தது அமெரிக்கா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பகு திக்குள் 15 ஆண்டுகளுக்கு முன் னரே ஜெய்ஷ் இ முகமது அமைப் பின் பயிற்சி முகாம் இருந்தது அமெரிக்காவிற்குத் தெரிய வந்த தாக தகவல் வெளியாகி உள்ளது. 
விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் வெளியே கசிந்த அமெரிக்க ராணுவ ஆவணங்களில் இது பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. 
கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் ஜாபரி மில்லர் கையெழுத்திட்ட அந்த ஆவணத்தில்,  பாகிஸ்தான் பயங் கரவாத அமைப்புகள் குறித்த முக் கிய தகவல்கள் இடம் பெற்றுள் ளன. 
குறிப்பாக, ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஒரு பயங் கரவாதியின் வாக்குமூலம் இடம் பெற்றிருந்தது. அதன்மூலம்  பயங் கரவாத அமைப்புகளின் செயல் பாடுகள் குறித்து அமெரிக்கா துல்லியமாக அறிந்திருந்தது தெரியவந்துள்ளது. 
பாகிஸ்தானில் உள்ள குஜார் பகுதியைச்  சேர்ந்த ஹஃபீஸ் ரஹ்மான் (20), பாகிஸ்தானின் பாலாக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாமில் தனக்கு ஆரம்ப மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்ததாக அந்த ஆவணத்தில் உள்ளது. 
இந்த ஆவணத்தின் மூலம், ரஹ்மான் அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகளுக்கு எதி ராக செயல்பட, ஜெய்ஷ் இ முக மது அமைப்பிடம் இருந்து பயிற்சி பெற்றுள்ளது தெரியவந்தது. அந்த இயக்கம் பயங்கரவாதிகளை உருவாக்குவதோடு, அல் கொய்தாவுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 
மேலும் ரஹ்மான் முல்லா பயங் கரவாதிகளின் தூண்டுதலால், தலிபான் அமைப்பிற்கு உதவ சென்றுள்ளான். பாகிஸ்தானின் சஹிர் பகுதிக்குச் சென்று ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றுள்ளான். பயிற்சி முடிந்த பின்னர் மிகப்பெரிய பயங் கரவாத அமைப்புடன் இணைந்து ஆப்கானிஸ்தான் சென்றுள்ளான். இதன்பின்னர் கியூபாவில் கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டான். 
ஜெய்ஷ் இ முகமது பாகிஸ்தான் நாட்டின் உதவியோடு இயங்கக் கூடிய மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்றும், அந்த அமைப்பு அமெரிக்காவைத் தாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் ஜாபரி மில்லர் தனது ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தார்.