10,000 ஏக்கர் நிலத்தில் காட்டுத் தீ

கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு காட்டுச்சரணாலயம். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் காட்டுப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது.  இந்தத் தீ மளமளவென அந்தக் காடு முழு வதும் பரவியது. பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் பற்றி எரிந்த இந்தக் காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. 
இதேபோல், மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட நாகரஒலே வனப்பகுதியிலும் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அங்கும் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீ பரவி வருகிறது. இந்தத் தீ விபத்தில் அங்கிருந்த ஏராளமான மரங்கள் தீயில் கருகிவிட்டன. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி கருகிவிட்டது
இதுவரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி காட்டுத்தீயினால் கருகி நாசமாகி உள்ளது.