நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் மீது அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மும்பை மற்றும் சூரத்தில் உள்ள நிரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.147 கோடியே 72 லட்சம் மதிப் புள்ள அசையும், அசையா சொத்துகளை நேற்று அமலாக்கத் துறை முடக்கியது. இதில் கட்டடங்கள், 8 வாகனங்கள், நகைகள், ஓவியங்களும் அடங்கும். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.