பாகிஸ்தானில் பிடிபட்டிருக்கும் இந்திய விமானி அபிநந்தனைக் காண்பிக்கும் படங்களையும் காணொளிகளையும் அகற்ற அந்நாட்டு அரசாங்கம் யூடியூப் காணொளித்தளத்தை நிர்வகிக்கும் கூகல் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களிடையே இவை பதற்றத்தைத் தூண்டலாம் என்றும் இதனால் நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் இந்தியாவின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சு கூகல் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டது.
'விங் கமாண்டர்' அபிநந்தனின் விமானம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் பகுதியில் விழுந்ததை அடுத்து அங்குள்ள மக்கள் அவரை அடித்தனர். பின்னர் பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் அவரைத் தடுப்புக்காவலில் வைத்தனர். அபிநந்தனைக் காட்டும் மூன்று காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.
காணொளி தொடர்பான சர்ச்சையின் காரணமாக அவை யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றது அமைச்சு.

