மேளதாளம், ஆரவாரம், அமோக வரவேற்பு: இந்தியா திரும்பினார் விமானி அபிநந்தன்

பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப் படை போர் விமானி அபிநந்தன் வர்த்தமான், 35, இரு நாட்களுக்குப் பின் நேற்று இந்தி யாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி யில் மிக்-21 பைசன் விமானத்தில் பறந்த அவர் பாகிஸ்தானின் எஃப்-16  போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார். இருப்பினும், பாகிஸ்தானின் தாக்குதலில் அவரது விமானமும் சிதறுண்டது. வான்குடை மூலம் கீழே குதித்து உயிர்தப்பிய அவர், பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார்.
இதையடுத்து, அவரை உடனடி யாக விடுவிக்கவேண்டுமென இந் தியாவும் உலக நாடுகள் பலவும் அளித்த  நெருக்குதலை அடுத்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.
நேற்று மாலை வாகா எல்லையை வந்தடைந்த அவரை வரவேற்க காலை முதலே பொதுமக்கள் திரளத் தொடங்கினர். 
அதேபோல, விமானப்படைக் குழு ஒன்றும் அவரை வரவேற்கக் காத் திருந்தது.

திரு அபிநந்தனின் பெற்றோ ரான வர்த்தமான்-ஷோபா தம்பதி யர் தங்கள் வீரமகனை வரவேற்க வாகா எல்லைக்கு நேரே சென் றனர். முன்னதாக, அவர்கள் விமானத்தில் சென்றபோது சக பயணிகள் அனைவரும் எழுந்து நின்று, கரவொலியும் உற்சாகக் குரலும் எழுப்பி அவர்களை வர வேற்றனர். அதுபோல, டெல்லி விமான நிலையத்தில் தரையிறங் கியபோதும் அத்தம்பதியர் முதலில் இறங்க வழிவிட்டு, கௌரவப்படுத் தினர்.
முன்னதாக, திரு அபிநந்தனை விமானம் மூலமாக அனுப்பி வைக்கும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிரா கரித்தது.

திரு அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தபோதும் எல்லைப் பகுதி களில் இந்தியத் தற்காப்புப் படைகள் உச்ச விழிப்புநிலையுடன் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, விமானி அபி நந்தனை விடுவித்ததன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சாதகமாக நடந்துகொண்டுள்ளது எனக் கருதிவிடக்கூடாது என்றும் 1971 போருக்குப் பின் இந்தியா 90,000 போர்க் கைதிகளை பாகிஸ் தானிடம் ஒப்படைத்ததை மறந்து விடக்கூடாது என்றும் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியிருக்கிறார்.