தேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது

லக்னோ: இந்திய எல்லையில் போர் பதற்றம் நிலவியதால் நாடா ளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடக்குமா? என்ற கேள்வி எழுந் தது. 
அதற்குப் பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,  தேர்தல் தள்ளிப் போகாது என்றும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட சென்ற அவர், இத்தகவலை செய் தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக் கிறது. தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் வாக்களிப்பு தேதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
அநேகமாக அடுத்த வாரம் 5ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.