300 பயங்கரவாதி கொல்லப்பட்டது உண்மையா?: மம்தா

கோல்கத்தா: கடந்த வாரம் இந்திய விமானப் படை பயங்கர வாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக 4 பயங்கரவாத முகாம் கள் அழிந்ததாகவும் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டி ருக்கலாம் என்றும் அறிவிப்பு கள் வெளியாகின. 
இந்நிலையில் நேற்று முன் தினம் கோல்கத்தாவில் செய்தி யாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “300 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாக ஊடகங்களில் வெளி யான தகவல் உண்மையா இல் லையா? ஏனென்றால் அனைத் துலக ஊடகங்களில் உயிரிழப்பு கள் எதுவும் இல்லை என செய்திகள் வந்துகொண்டிருக் கின்றன. 
“எனவே எது உண்மை என் பதை தெளிவுபடுத்த வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். 
இந்நிலையில், இந்திய விமா னங்கள் பாகிஸ்தானின் பால கோட்டில் ஜெய்ஷ்=இ=முகம்மது முகாம்கள் மீது நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று துணைத் தளபதி ஆர்.ஜி.கே. கபூரிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார். 
அதற்குப் பதிலளித்த அவர், “விரும்பிய இலக்குகள் தாக்கப் பட்டன. ஆனால், இச்சம்பவத் தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை,” என்றார்.