விமானி அபிநந்தனுடன் வந்தவர்  பாகிஸ்தான் நாட்டின் மருத்துவர் 

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத் தின் பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் வெள்ளிக்கிழமை ( மார்ச் 1ஆம் தேதி) மாலை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட் டார். வாகா எல்லைக்கு அபி நந்தனை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் அதிகாரி, ராணுவ அதிகாரிகள் அழைத்து வந்தனர்.அப்போது அபிநந்தனுடன் ஒரு பெண் அதிகாரி இருந்தார். 

அபிநந்தனுடன் சேர்ந்து அந்தப் பெண் அதிகாரியும் சமூக ஊடகங் களில் பிரபலமானார்.ஆனால் அந்த அதிகாரி யார் என்பது பலருக்குத் தெரியவில்லை. யாரும் இது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. அந்தப் பெண் அதிகாரி டாக்டர் பரிஹா பக்டி என்பது தற்போது தெரிய வந்துள் ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சில் இந்திய விவகாரங் களுக்கான இயக்குநராக பரிஹா பக்டி செயல்படுகிறார்.

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவ் வழக்கை கையாளும் பிரதான பாகிஸ்தான் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவை கடந்த ஆண்டு இஸ் லாமாபாத்தில் அவரது தாய், அவரது மனைவி சந்தித்தபோது பரிஹா பக்டி உடனிருந்தார்.