‘பாகிஸ்தானில்தான்  மசூத் அசார் உள்ளார்’

புதுடெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலை வரான மசூத் அசார் பாகிஸ் தானில் இருப்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் குரே‌ஷி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள் ளார். 
ஆனால் மசூத் அசார் உடல்நலமின்றி இருப்பதாக அவர் தெரிவித்தார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பத்து நிமிட பேட்டியில் அசார் பாகிஸ்தானில் இருப்பதை  அமைச்சர் குரே‌ஷி ஒப்புக் கொண்டார்.
“மசூத் அசார் இன்னமும் பாகிஸ்தானில்தான் இருக் கிறாரா, அவரைக் கண்டுபிடித்து கைது செய்வீர்களா,” என அவரி டம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் குரே‌ஷி, எனக்குக் கிடைத்த தகவலின்படி அவர் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்றார். ஆனால் அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. அதனால் அவர் வெளியே வர முடியவில்லை என்று அவர் சொன்னார்.
இந்தியாவின் காஷ்மீரில் அண்மையில் நடத்தப்பட்ட தற் கொலைத்தாக்குதலில் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த 40 பேர் மாண்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு மசூத் அசார் தலைவராக உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்களை இந்தியா வழங்கவில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தளமாகச் செயல்படு கிறது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ள வேளையில் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதை அமைச்சர் நேரடியாக ஒப்புக் கொண்டார்.