மாசடைந்த தலைநகர் டெல்லி

புதுடெல்லி: உலகின் மாசடைந்த பத்து தலைநகரங்களில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா வின் தலைநகர் புதுடெல்லி.
கடந்த 2018ஆம் ஆண்டில் உலகில் மாசடைந்த தலை நகரங்கள் மற்றும் நகரங்கள் குறித்து ஐக்யூ ஏர் & ஏர்வி‌ஷுவல் மற்றும் கிரீன்பீஸ் ஆகிய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. காற்றில் இருக்கும் மாசுபாட்டின் அளவைக் கணக்கிட்டுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதில் தெற்காசிய நகரங்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட் டுள்ளது தெரிகிறது. ஒட்டு மொத்த பட்டியலில் தலைநகர் டெல்லிக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள குருகிராம் முதலிடம் பிடித்துள்ளது. 

இதன் ஸ்கோர் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சற்று அதி கரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் ஐந்து நகரங்களில் பாகிஸ் தானின் ஃபைசலாபாத் நகர் இடம் பெற்றுள்ளது. 
இதுகுறித்து பேசிய கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியாவின் நிர்வாக இயக்குநர் யெப் சனோ, இந்த மாசுபாடு காரணமாக மிக மோசமான உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும். ஆரோக் கியத்திற்கு பெரிய கேடு உண்டாகும் என்று எச்சரித்துள்ளார். 

ஏராளமான மனித உயிர்களை இழக்க நேரிடுவதோடு, 225 பில்லி யன் டாலர் அளவிற்கு தொழிலாளர் பண இழப்பும், டிரில்லியன் கணக் கில் மருத்துவச் செலவும் ஏற்படு கிறது என்று கூறினார். மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளியல் நாடாக இந் தியா திகழ்கிறது. 
ஆனால் உலகின் மாசடைந்த நகரங்களின் முதல் 30 நகரங் களின் பட்டியலில் 22 இந்திய நகரங்கள் இருக்கின்றன. 
சீனாவில் 5, பாகிஸ்தானில் 2, பங்ளாதே‌ஷில் ஒரே ஒரு நகரமும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 
உலக வங்கியின் அறிக்கையின் படி, இந்தியாவில் மருத்துவத்திற்கு அதிகளவு செலவிடப்படுகிறது. 
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக உற்பத்தித் திறன் குறைகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5% அளவிற்கு இழப்பு ஏற் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.