ஆந்திரா, தெலுங்கானாவில்  கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் கூட்டணி

ஹைதராபாத்: மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இடதுசாரிகள் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என மாநிலத்துக்குத் தகுந்தவாறு வியூகம் வகுத்து வருகின்றனர். 
ஆந்திர மாநிலத்தில் இம்முறை நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சியினர். 
மேலும், தெலுங்கானா மாநிலத்தில் இந்த இரு கட்சிகளும் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளன.  இதனை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.