டெல்லியில் காங். தனித்துப் போட்டி

புதுடெல்லி: மக்களவைத் தேர்த லுக்காக தொடர்ந்து கூட்டணிக்கு முயற்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியைக் காங்கிரஸ் மீண்டும் புறக்கணித்துள்ளது.
டெல்லியில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியைப் பறித்த ஆம் ஆத்மி, தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் வலுவான எதிர்க்கட்சியாக உருவா னது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற முயலும் கட்சி களின் பட்டியலில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் இடம்பெற்றுள்ளன. எனவே, காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் தமக்குப் பலன் தரும் எனக் கேஜ்ரிவால் கருதுகி றார். இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கி ரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி யும் வலியுறுத்தி வருகிறார்.

இவர் உட்படப் பல்வேறு கட்சி தலைவர்கள் பேசியும் ஆம் ஆத்மி யுடன் கூட்டணி அமைக்க காங் கிரசின் டெல்லி தலைவர்கள் விரும்பவில்லை.
இந்தக் கூட்டணி அமைந்தால் மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமையாது என அவர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் தாம் தனித் துப் போட்டியிடவுள்ளதாக தெரி வித்த கெஜ்ரிவால், அதன் 6 வேட் பாளர்களையும் அறிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், காங் கிரசின் டெல்லி நிர்வாகிகளை ராகுல் காந்தி அழைத்துப் பேசி னார். இதில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் ‌ஷீலா தீட்சித், முன்னாள் தலைவர் அஜய்மாக்கான் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எனினும், ராகுலின் இந்த முயற்சி பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ‌ஷீலா தீட்சித் கூறுகையில், "எங்கள் வாதத்தை ராகுல் ஏற்றுகொண்டார். இதனால், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமையும் வாய்ப்புகள் இல்லை. டெல்லியின் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!