உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் முகேஷ் அம்பானி

புதுடெல்லி: உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி 13ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
106 இந்தியப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36வது இடத்தில் உள்ளார். ஹெச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82வது இடத்திலும் லட்சுமி மிட்டல் 91வது இடத்திலும் உள்ளனர்.
முகேஷ் அம்பானியின் சகோதரரும் ஆர்.காம் நிறுவனத்தின் தலைவருமான அனில் அம்பானி 1,349ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.