பாஜக - காங்கிரஸ் ரகசிய கூட்டணி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 
இந்நிலையில் பாரதிய ஜனதாவும் காங்கிரசும் ரகசியமாக கூட்டணி சேர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக வாக்குகளைப் பிரிக்கும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “ஒட்டுமொத்த நாடும் மோடி=அமித் ஷா இரட்டையர்களைத் தோற்கடிக்க விரும்பும்போது, பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க பாஜகவுக்கு காங்கிரஸ் உதவுகிறது. பா.ஜனதாவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக வதந்தி உலவுகிறது. இந்தப் புனிதமற்ற கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட ஆம் ஆத்மி தயாராக உள்ளது,” என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.