பாலியல் பலாத்காரம் செய்த ஆடவரைக் கொன்ற பெண்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் தீயில் கொளுத்தப்பட்ட இந்தியப் பெண் ஒருவர், தன்னைத் தாக்கியவரைத் தீக்குள் இழுத்து அவரைக் கொன்றதாக கோல்கத்தா மாநில போலிசார் தெரிவித்தனர்.

முகத்திலும் கைகளிலும் ஏற்பட்ட தீக்காயங்களுடன் அந்தப் பெண் தப்பினார்.

தனது இரண்டு மகள்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் 42 வயது ஆடவர் நுழைந்து தன்னைத் தாக்கியதாக அந்த 35 வயது கைம்பெண் போலிசாரிடம் தெரிவித்தார். 

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான பலாத்காரங்கள் செய்யப்பட்டு வருவதாக அண்மைய விவரங்கள் கூறுகின்றன.