சிங்கப்பூர் வெள்ளிக்கு ஒப்பான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது

இந்திய ரூபாய் நாணயத்தின் மதிப்பு பிப்ரவரியின் தொடக்கத்தைக் காட்டிலும் வியாழக்கிழமை (மார்ச் 7) அதிகமாக உள்ளது. உலக நாடுகளுக்கு இடையிலான பதற்றங்கள் ஓரளவு தணிந்திருப்பதும் ஆசிய நாணய மதிப்பின் ஏற்றமும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்துள்ளன.

ஒரு வெள்ளிக்கு ஒப்பான இந்திய நாணயத்தின் மதிப்பு வியாழக்கிழமை மாலை  5 மணி நிலவரப்படி 51.598 ரூபாயாக உள்ளது. இது, கடந்த வாரம் வியாழக்கிழமையின்போது ( பிப்ரவரி) 52.731 ஆக உள்ளது. கடந்த மாதம் 28ஆம் தேதி  ஒரு வெள்ளிக்கு ஒப்பான இந்திய நாணயத்தின் மதிப்பு 53.005 ரூபாய். 
 
பாரதிய ஜனதாக் கட்சி மறுபடியும் அரசாங்கத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இருப்பதாக ‘கேஆர் சோக்ஸ்கி இன்வெஸ்ட்மன்ட் மேனேஜர்ஸ்’ நிறுவனம் தெரிவித்தது.