ஜம்மூவில் பேருந்து ஒன்றில் வெடிப்பு; பலர் காயம்

ஜம்மூ நகரிலுள்ள பேருந்து நிறுத்தம் நேர்ந்த கையெறிக் குண்டுவெடிப்பில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பேருந்து ஓட்டுநர்களாகவும் பேருந்து நடத்துநர்களாகவும் உள்ளனர்.

பேருந்துக்கு அடியில் அந்தக் குண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலிஸ் தெரிவித்தது. அந்நேரத்தில் பேருந்துக்குள் யாரேனும் இருந்தார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சம்பவ இடத்தைச் சுற்றி போலிஸ் அதிகாரிகளும் மோப்பநாய்களுடன் நின்றுகொண்டிருந்ததைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. அதனைச் சுற்றி போலிசார் தடுப்புகளை வைத்துள்ளனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதற்றம் நிலவி வரும் வேளையில் ஜம்மூவில் இச்சம்பவம் நேர்ந்துள்ளது.