மாறி மாறி அடித்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள்

ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் திட்டக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது பலரும் பார்க்கும்விதமாக பாஜக எம்.பி. ஒருவரும் எம்எல்ஏ ஒருவரும் மாறி மாறித் தாக்கிக்கொண்ட சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது. சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் திறப்புவிழா கல்வெட்டில் தமது பெயர் இடம்பெறாததற்கு எம்எல்ஏ ராகேஷ் பகேல்தான் காரணம் எனக் கூறி, தமது காலணியைக் கழற்றி அவரைப் பலமுறை அடித்தார் சரத் திரிபாதி எம்.பி. இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ், பதிலுக்கு அவரைத் தாக்கினார். இதை இழிவான, கண்ணியமற்ற நடத்தை எனக் குறிப்பிட்ட பாஜக மாநிலத் தலைவர் மகேந்திரநாத் பாண்டே, விசாரணை நடத்தி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். காணொளிப்படம்