தன்னை கொளுத்திவிட்ட காமக்கொடூரனை தீயில் இழுத்துத் தள்ளி கொன்ற 35 வயது விதவை

கோல்கத்தா: தன்னைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தி தீ மூட்டிவிட்ட காமக் கொடூரனை அந்தத் தீயில் இழுத்துத் தள்ளி ஒரு மாது கொன்றுவிட்டார். 
மூன்று பெண்களுக்குத் தாயான அந்த மாது, கணவனை இழந்தவர். அவ ருக்கு வயது 35. மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தா நகரின் வடக்குப் பகுதியில் இருக்கும் தன் வீட்டில் திங் களன்று  அந்த மாது தனியாக இருந்த போது, 42 வயதுள்ள ஆடவர் ஒருவர் வீட்டினுள்ளே புகுந்து அந்த விதவையைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டார். 
அதோடு மட்டுமின்றி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து அந்த மாதின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார். இருந்தாலும் தன்னைக் கொடுமைப்படுத் திய அந்தக் காமூகனை விடாது அந்த மாது, அவனைத் தீயில் தள்ளிவிட்டார். 
பிறகு அவர் போட்ட கூச்சலைக் கேட்டும் வீட்டிலிருந்துப் புகை கிளம்பி யதைப் பார்த்தும் பயந்துபோன அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். 
அங்கு நெருப்பில் இருவரும் வெந்து கொண்டிருந்ததையும் பக்கத்தில் மண் ணெண்ணெய் இருந்ததையும் பார்த்து உடனடியாக இருவரையும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிறகு இருவரும் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கிசிச்சை பல னின்றி அந்த ஆடவர் அங்கு இறந்து விட்டார். விதவைப் பெண்மணி உடல்நலம்  தேறி வருகிறார். இந்த விவரங்களைப் பாதிக்கப்பட்ட மாது கூறியதாக கோல் கத்தா போலிஸ் அதிகாரி சஜால் கந்தி பிஸ்வாஸ் தெரிவித்தார்.
இந்தியாவில் இத்தகைய பாலியல் கொடுமைகள் அதிகம் நடைபெறுகிறது. கடந்த 2016ல் ஒவ்வோர் நாளும் சரா சரியாக 100 பேருக்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. 
காமக்கொடூரப் பேர்வழிகள், தங் களுக்கு இலக்காகும் அப்பாவி பெண் களைக் கொலை செய்வதற்கும் துணிந்து விடுகிறார்கள். இருந்தாலும் அண்மைய காலமாக பெண்களிடம் விழிப்புணர்வு ஏற் பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.