இந்திய அரசதந்திரிகளை மிரட்டிய பயங்கரவாதிகள்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய அரச தந்திரிகளை ஐஎஸ்ஐ பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டி இருக்கிறார்கள். 
‘ஒழுங்காக நடந்துகொள் ளுங்கள். ஏற்கெனவே இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறோம்’ என்று  மிரட்டி இஸ்லாமாபாத்தில் இந்திய அரச தந்திரிகளையும் தூதரக ஊழியர் களையும் அந்தப் பயங்கரவாதி கள் அலைக்கழித்தனர். 
இஸ்லாமாபாத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய தூதரகத் திற்குச் சொந்தமான வாகனத்தில் இரு இந்திய அதிகாரிகள் தூதர கத்திற்குச் சென்றபோது பின் தொடர்ந்து வந்த ஐஎஸ்ஐ பயங் கரவாதிகள் தங்களை மிரட்டிய தாக தெரிவித்த இந்திய அதி காரிகள், அது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சிடம் புகார் அளித்ததாகவும் கூறினர். 
இதனிடையே, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃப், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றும் அதைப் பயன்படுத்தி இந்தியா வில் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் வேவுத்துறை முன்பு முயன்று இருப்பதாகவும் புதன் கிழமை குறிப்பிட்டார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூன்று மாதக் குழந்தையின் பெற்றோரான மாவீரன், கவுசல்யாவிடம் மீட்கப்பட்ட குழந்தையை போலிசார் ஒப்படைக்கின்றனர். படம்: ஊடகம்

20 Mar 2019

கடத்தப்பட்ட குழந்தை 24 மணிநேரத்தில் மீட்பு; பெண் கைது