ராகுல்: மோடியிடம் விசாரணை நடத்துக

புதுடெல்லி: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ரஃபேல் ராணுவ விமானம் ஊழல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. ரஃபேல் உடன்பாடு மூலம் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 30,000 கோடியைத் திருடிவிட்டார் என்றும் அவர் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குரல்கொடுத்து இருக்கிறார். 
ரஃபேல் போர் விமானம் ஒப்பந் தம் தொடர்பான ரகசிய ஆவணங் கள் பாதுகாப்புத்துறை அமைச் சிடம் இருந்ததாகவும் அவை திருடப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் புதன்கிழமையன்று தெரிவித்தது.
அந்த ஆவணங்களின் அடிப் படையில் கட்டுரைகளை வெளி யிட்டு இருக்கும் நாளிதழ் ஒன் றுக்கு எதிராக அதிகாரபூர்வ ரகசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவி யேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பாஜக அரசாங்கம் உடன்பாடு செய்தது. 
ரூ. 58,000 கோடி மதிப்பிலான இந்த உடன்பாட்டில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க் கட்சியினர் குற்றம்சாட்டி வரு கின்றன.