ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஜம்மு நகரில் மையமான இடத்தில் பர பரப்பான பேருந்து நிலையத்தில் நேற்று பட்டப்பகலில் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் மாண்டார். குறைந்தபட்சம் 32 பேர் காயம் அடைந்துவிட்டனர். இந்தச் செயல் பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஜம்மு நகரின் மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் இந்த விவரங் களைத் தெரிவித்தார். ஜம்மு நகரின் அந்தப் பகுதியில் சென்ற ஆண்டு மே முதல் இதுவரையில் பயங்கரவாதிகள் மூன்று முறை கையெறி குண்டு தாக்குதல்களை அரங் கேற்றி இருக்கிறார்கள். நேற்றைய தாக்குதல் மூன்றா வது தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நிகழ்ந்த துமே அந்த இடத்தை போலிஸ் சுற்றி அடைத்துவிட்டது. கையெறி குண்டு வீசியவரைக் கண்டு பிடிக்க உடனடியாக வேட்டை தொடங்கப்பட்டது என்று ஜம்மு நகர போலிஸ் தலைவர் எம்.கே சின்ஹா கூறினார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த அவர், யாரோ ஒருவர் கையெறி குண்டை வீசியிருக்கிறார் என்றும் அதில் காயம் அடைந்த வர்கள் அரசாங்க மருத்துவமனைக் குக் கொண்டுசெல்லப்பட்டதாக வும் கூறினார்.
ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல்
1 mins read

