ரஷ்யாவுடன் $3 பி. ஒப்பந்தம்; அமெரிக்காவின் மிரட்டலை மீறி அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை தருவிக்கும் இந்தியா

புதுடெல்லி: பொருளியல் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியதை பொருட்படுத் தாமல்  ரஷ்யாவுடன் பெரும் தொகைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது. 
அணுசக்தியில் இயங்கும் ‘அகுலா’ நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்கு இந்தியா பெறுவதற்காக இந்த  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை மூன்று பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து பத்தாண்டு களுக்கு குத்தகைக்கு வாங்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இதன் தொடர்பில் பல மாதங் களாக பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு தற்போது ஒப்பந்தம் கை யெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் வழங்க வேண்டும்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தி யாவும் தனது கடற்படையை பலப் படுத்தி வருகிறது. 
ஏற்கெனவே 1988ல்  ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும் 2012ல் ஒரு ரஷ்ய நீர் மூழ்கிக்கப்பலை 10 ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது.
ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எஸ் -400 என்ற ஏவுகணை சாதனங்களைப் பெற 5.4 பில் லியன் டாலர் தொகைக்கு இந் தியா ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, நிதித் தடைகள் விதிக் கப்படும் என்று எச்சரித் திருந்தது. இந்த நிலையில் மற்றொரு மாபெரும் தற்காப்பு ஒப்பந்தத்தில் ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்த தகவலை இந்திய பாது காப்புத் துறை வெளியிடவில்லை.