முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் ஏர்இந்தியா சேவை

    
புதுடெல்லி: உலக மகளிர் தினத் தன்று பெண்களுக்கு முன் னுரிமை வழங்கி ஏர்இந்தியா பெருமைப்படுத்தியிருக்கிறது.
முழுக்க, முழுக்க பெண்களே இயக்கும் 52 விமானச் சேவை களை நேற்று அது அறிமுகப் படுத்தியது. இதில் 12 வெளி நாடுகளுக்கான விமானச் சேவை களாகும். நாற்பதுக்கும் மேற்பட் டவை உள்நாட்டு விமானச் சேவைகளாகும். 
இந்த விமானச் சேவைகளில் விமானி, துணை விமானி, சிப்பந்திகள், பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், முகப்பு சேவை, மருத்துவர் உட்பட அனைவரும் பெண்களாக இருப் பார்கள் என ஏர்இந்தியா நிறு வனத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
டெல்லி - சிட்னி, மும்பை - லண்டன், டெல்லி - ரோம், டெல்லி - லண்டன், மும்பை - டெல்லி - ஷாங்காய், டெல்லி - பாரீஸ், மும்பை - நியூயார்க், டெல்லி - நியூயார்க், டெல்லி - வா‌ஷிங்டன், டெல்லி - சிகாகோ இடையிலான வழித்தடங்களில் செல்லும் விமானங்களை இந்தியப் பெண்கள் இயக்க உள்ளனர்.