எல்லை பதற்றத்திற்கு இடையே இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்

எல்லை பதற்றத்திற்கு இடையே இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்

1 mins read
4d7477cd-16d5-44ed-9da7-82791709383e
-

அம்பாலா: அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந் தவர் பர்வீந்தர் சிங் (வயது 33). இவரது உறவுப்பெண் கிரண் சர்ஜீத் கவுர் (27) பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2016ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய் தனர். திருமணத்துக்காக பிப்ரவரி 23ஆம் தேதியே கிரண், பாட்டி யாலா வருவதாக இருந்தது. ஆனால் பயங்கரவாத தாக்குதலால் தாமதம் ஏற்பட்டு கடந்த வியாழக் கிழமை 45 நாள் விசாவில் சம்ஜவ்தா விரைவு ரயில் மூலம் பாட்டியாலா வந்தார். அவர்களது திருமணம் அங் குள்ள குருத்வாராவில் சீக்கிய முறைப்படி நேற்று முன்தினம் நடைபெற்றது. பர்வீந்தர் சிங் கூறும் போது, ‚"கடந்த ஆண்டு நான் பாகிஸ்தான் செல்ல விசா கேட்டபோது அதற்கு மறுக்கப்பட்டது. அதனால் தான் பெண் வீட்டார் இங்கு வந்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனது மனைவிக்கு இந்திய குடி யுரிமை கேட்டு விண்ணப்பிப் பேன்," என்றார்.