கர்நாடக அரசியலில் தாத்தா, மகன், பேரன் 

பெங்களூரு: கர்நாடகாவில் குடும்ப அரசியல் தலைதூக்கி யுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி யின் மகனும் தற்போது அரசியலில் குதித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரான தேவகவுடா ஏற்கெனவே பிரத மராக இருந்தார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதலமைச் சராக உள்ளார். 
இன்னொரு மகன் ரேவண்ணா கர்நாடக அமைச்சராக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண் ணாவின் மனைவி பவானி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில் குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் கவுடாவும் அரசியலில் குதிக் கிறார். அவர் மாண்டியா நாடாளு மன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளராக போட்டி யிடப்போவதாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.

இது குறித்து முதலமைச்சர் குமாரசாமியிடம் நிருபர்கள் கேட்ட போது, “அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எது வும் கிடையாது. என் மகன் நிறுத் தப்படுகிறான் என்றால் வாரிசு அடிப்படையில் அல்ல, வெற்றி வாய்ப்பு எப்படி என்பதைப் பொறுத்தே வாய்ப்பு வழங்கப்படு கிறது.
“வாரிசுகள் அரசியலுக்கு வரு வது எல்லா இடங்களிலும்தான் இருக்கிறது. நாங்கள் ஒன்றும் மறைமுகமாக எங்கள் வாரிசைக் கொண்டு வரவில்லை. மக்களைச் சந்தித்தே அரசியலுக்கு அறிமுகம் செய்கிறோம். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறோம்.
“எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தானே, தேர் தலில் நிற்க அவர்களுக்கும் உரி மை இருக்கிறது,” என்றார்.