மோடி தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்பு

இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு எதிர்வரும் இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 264 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர் கூட்டணி 141 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் நேற்று தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தலில் மொத்தம் 543 தொகுதிகளில் போட்டி உள்ளது.

ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக இந்தியப் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.