ஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

1 mins read
e25dddc4-fb47-4bf5-bb0a-3e34af05f45a
-

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின்படி அந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து சுட்டனர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சண்டையின் போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடும் சேதம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.