வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் 

புதுடெல்லி: தேர்தலின்போது வேட் பாளர்களின் பெயர் குழப்பத் தைத் தவிர்க்க வாக்குப்பதிவு இயந் திரத்தில் இனி அவர்களின் புகைப்படத்தையும் அச்சிடப் போவ தாகத் தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. 
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் களத்தில் இருக் கும் கட்சிகள் குறித்தும் சுயேச்சை கட்சிகளின் சின்னங்கள் குறித் தும் மட்டுமே விவரங்கள் பொறிக் கப்பட்டு இருக்கும். 
இந்த நடவடிக்கையால் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற் பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் இருந்தால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

எனவே இதைத் தவிர்க்கும் வகையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் அந் தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னத்துடன் அவர்களின் புகைப்படத்தையும்  அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
அத்துடன் அஞ்சல் வாக்குக் கான வாக்குச்சீட்டுகளிலும் வேட் பாளர்களின் புகைப்படம் அச்சிடப் பட்டு இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதற்காகத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அனைவரும் அண்மையில் எடுத்துக்கொண்ட அஞ்சல் தலை அளவிலான புகைப் படத்தைத் தேர்தல் அதிகாரியிடம் உடனே ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.