புதுடெல்லி: பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையும் இல்லை, அதுபோல் எனக்குக் கனவுகளும் இல்லை என்று மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி பிரதமராக வரக்கூடும் என யூக செய்திகள் பரவின. இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "நான் எந்தக் கணக்கும் போடவில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை. "இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றி உள்ளேன். பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை. "நாடுதான் எனக்குப் பெரியது. எனக்குக் கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்கவோ, ஆதரவு தேடவோ மாட்டேன். நான் எப்போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்," என்றார்.
கட்காரி: பிரதமர் பதவி மீது ஆசையோ, கனவுகளோ இல்லை
1 mins read

