மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 mins read

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், ட்ரால் அருகே உள்ள பிங்லிஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி முத்சார் அகமது கான் உள்பட மூன்று பயங்கரவாதிகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்களிடம் இருந்து இரு ஏகே 47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.