‘சபரிமலை பற்றி பேசக்கூடாது’

திருவனந்தபுரம்: அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை விவகாரம் தொடர்பில் எதையும் பேசக் கூடாது என கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரித்து இருக்கிறார். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அதை நடைமுறைப்படுத்தும் செயலில் கேரள அரசு இறங்கியது. ஆனால் அதை எதிர்த்து அங்கு பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.