பாரதிய ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவரின் மகன்

நாசிக்: மகாராஷ்டிர மாநில காங் கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீலின் மகனான சுஜய் விக்கே பாட்டீல் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி தமக்கு வாய்ப்புத் தந்தாலும் தராவிடினும் இம்முறை தாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக சுஜய் ஏற்கெனவே அறிவித்து இருந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அகமது நகர் தொகுதியில் போட்டியிட விரும்பு வதாகக் கூறப்பட்ட நிலையில், அத்தொகுதியை மருத்துவரான தம் மகன் சுஜய்க்கு விட்டுத்தரும் படி ராதாகிருஷ்ணா வலியுறுத்தி இருந்தார்.

ஆனால், பொதுத் தேர்தலில் இம்முறை தாம் போட்டியிடப்போவ தில்லை என பவார் அறிவித்து விட்டதால் அகமது நகரில் காங் கிரஸ் சார்பில் சுஜய் நிறுத்தப் படலாம் எனப் பேச்சு அடிபட்டது. இந்நிலையில், சுஜய் பாஜகவில் இணைந்தது அத்தொகுதியில் காங்கிரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். அங்கு அவரை பாஜக சார்பில் நிறுத்தப் பரிந்துரைப் பேன் என மாநில முதல்வர் ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.