‘காங்கிரசுடன் கூட்டணி இல்லை’

லக்னோ: அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஏழு கட்ட இந்தியப் பொதுத் தேர்தலில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மாபெ ரும் எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், உத்தரப் பிர தேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணி பற்றிக் கருத்துரைத்த மாயாவதி, அது பரஸ்பர மரியாதை, நேர்மையான நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப் படையில் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தமது மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்க பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணியே போதுமானது என்றும் அவர் சொன்னார். லக்னோவில் நேற்று பல மாநி லங்களில் இருந்தும் வந்திருந்த கட்சித் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய மாயாவதி, "நமது கட்சியுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனாலும், தேர்தல் வெற்றி என்ற லாபத்தை மட்டும் கருத்தில்கொண்டு அவற் றுடன் கூட்டணி வைத்தால் அது நம் கட்சிக்கே ஊறு விளைவித்து விடலாம்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!