தேர்தலைத் தவிர்க்கும் 40 கிராமங்கள்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், உத்தராக்‌‌ஷி மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அடிப்படைத் தேவை களைச் செய்து கொடுக்காத அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் தாங்கள் வாக்களிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளனர். 
  இந்த 40 கிராமங்களில் வாழும் மக்கள் மின்சாரம், சாலை, பள்ளி, போக்குவரத்து வசதி, தண்ணீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் எதுவுமில்லை என்பதால் அரசாங்கத்தால் எங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறி அப்பகுதி மக்கள் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.